இந்தியாவுக்கு பயணம் செல்லும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டரசு எச்சரிக்கை

Report Print Fathima Fathima in அமெரிக்கா
58Shares
58Shares
ibctamil.com

இன்று அமெரிக்கா வெளியிட்டுள்ள 2-ம் நிலை பயண ஆலோசனையில் , "குற்றம் மற்றும் பயங்கரவாதம்" காரணமாக " இந்தியா செல்லும் அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு" அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் "தீவிரவாதம் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை" காரணமாக கிழக்கு லடாக் மற்றும் லே தவிர மற்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் , இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளில் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம், ஏனெனில் அங்கு "ஆயுத மோதல்களுக்கான சாத்தியம்" இருப்பதாக ஆலோசனை கூறுகிறது.

இந்திய அதிகாரிகள் அறிக்கையின்படி "கற்பழிப்பு குற்றங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்றாகும், பாலியல் தாக்குதல்கள், வன்முறை குற்றங்கள், சுற்றுலா தளங்களில் நடத்தை மீறல் "அதிகளவில் நடப்பதால் இந்தியாவில் தனியாக பயணம் செய்வதை அமெரிக்க பெண்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாக பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் என்கெல்லாம் செல்ல கூடாதென அமெரிக்கா சில பகுதிகளை குறிப்பிட்டுள்ளது அதில் வடகிழக்கு மாநிலங்களில் ஆலோசனைக் குறிப்பில் குறிப்பிட்டதும் உள்ளது.

வன்முறை சம்பவங்கள், பஸ்கள், ரயில்கள் மற்றும் சந்தைகளில் குண்டுவெடிப்புகள் என்பன வடகிழக்கில் எப்போதாவது நிகழ்கின்றன எனவும் மாவோயிச தீவிரவாத குழுக்கள் செயலில் உள்ள பிற பகுதிகளான கிழக்கு மகாராஷ்ட்ரா வழியாக வடக்கு தெலுங்கானாவும், மேற்கு வங்காளமும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டின் கிராமப்புற பகுதிகள் மற்றும் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மற்றும் ஒடிஷா ஆகியவையும் அமெரிக்க எச்சரிக்கை பகுதிகளில் அடங்கும்.

அசாம், அருணாசல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் நக்சலைட் நடவடிக்கைகள் இருப்பதால் அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் மானில அரசு விஷயங்களாக செல்லும் போது அமெரிக்க தூதரக பொது அலுவலகங்களில் இருந்து சிறப்பு அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்