ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்ப்: அம்பலமான ரகசிய தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
612Shares
612Shares
ibctamil.com

ஆபாசப்பட நடிகையுடன் ஏற்பட்ட நெருக்கத்தை மறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவருக்கு பெருந்தொகை இழப்பீடாக வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை வழக்கம்போலவே அமெரிக்க வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆபாசப்பட நடிகையுடன் நெருக்கமாக பழகியதாகவும், இது அவரது மூன்றாவது திருமணம் முடிந்த ஓராண்டில் நடந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த விவகாரம் பிரச்னையை எழுப்பாமல் இருக்க அவருக்கு சுமார் 100,000 பவுண்ட்ஸ் இழப்பீடாக வழங்கியதாகவும், குறித்த தொகையை டிரம்பின் ஆஸ்தான சட்ட ஆலோசகர் மூலம் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே குறித்த விவகாரம் தொடர்பில் பேசிய ஆபாசப்பட நடிகை Stephanie Clifford, தாம் பணம் பெற்றுக்கொண்டதையும், பதிலுக்கு அவர்கள்விரும்பியப்படியே ஆவணங்களில் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது எழுவது முதன் முறையல்ல. இருப்பினும் வெள்ளை மாளிகை குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே இந்த குற்றச்சாட்டுக்கு உரிய முறையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்க எதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரத்தில் தரகராக செயல்பட்ட சட்ட ஆலோசகர் Michael Cohen கருத்து எதையும் கூற மறுத்துள்ளார்.

ஆபாசப்பட நடிகையும் டிரம்பும் கடந்த 2006 ஆம் ஆண்டு யூலை மாதம் சந்தித்துள்ளனர். இந்த தொடர்பு சில மாதங்கள் நீடித்ததாகவும், பத்திரிகைகளில் புகைப்படம் வெளியாகும் அளவுக்கு இருவரும் நெருக்கமாக பழகியதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்