கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்தியர் மரண தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்பு?

Report Print Arbin Arbin in அமெரிக்கா
194Shares
194Shares
ibctamil.com

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்தியர் மரண தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றியவர், ரகுநந்தன் யண்டமூரி (32).

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், சூதாட்ட பழக்கம் உடையவர் என்றும், அதனால் பெரும்தொகை கடன்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் பணத்துக்காக சத்யவதி (61) என்ற மூதாட்டியையும், பிறந்து 10 மாதமே ஆன அவரது பேத்தி சான்வியையும் 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22- ஆம் திகதி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு விசாரணை நீதிமன்றம் 2015-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. அந்தத் தீர்ப்பை பென்சில்வேனியா நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.

இதையடுத்து அவருக்கு அடுத்த மாதம் 23- ஆம் திகதி விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்ற சிறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகின.

தற்போது அவர் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பி விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பென்சில்வேனியா மாகாண ஆளுநர், அங்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை 2015-ம் ஆண்டு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்து இருப்பதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மாகாண சிறைத்துறை தகவல் தொடர்பு இயக்குனர் சூ மெக்நாட்டன் கூறும்போது, “எந்த ஒரு கைதிக்கும் மரண தண்டனை நிறைவேற்றத்தை நீதிமன்றம் நிறுத்தக்கூடாது என ஆளுநர் கூறியுள்ளார்.

அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்பதால் இதை சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.

பென்சில்வேனியாவில் கடந்த 20 ஆண்டுகளாக யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்