13 பிள்ளைகளை பட்டினி போட்டு நாய்களுக்கு உணவளித்த பெற்றோர்: விசாரணையில் அம்பலம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் பெற்றெடுத்த 13 பிள்ளைகளைப் பட்டினி போட்டு, சங்கிலியால் கட்டி வைத்துக் கொடுமைப்படுத்திய வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

David(வயது 57), Louise Turpin(வயது 49) ஆகியோர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர், இதற்கிடையில் விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

இரவு முழுவதும் தூங்க அனுமதிக்கப்படாத பிள்ளைகள் பகலில் மட்டுமே தூங்கியதால் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியே உள்ளவர்களுக்குத் தெரியவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பிப்பதற்குமுன் 2 ஆண்டுகள் பிள்ளைகள் திட்டமிட்ட நிலையில், சங்கிலியால் பிணைக்கப்பட்டனர்.

ஒரு மகன் மட்டும் கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறான், ஆனால் அவனது தந்தை அவனது கல்லூரிக்கு அருகிலேயே நின்று அவனை நோட்டமிட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்.

அவர்களது கடைசிக்குழந்தைக்கு மட்டும் சரியான உணவளிக்கப்பட்டிருக்கிறது, மீட்கப்பட்ட 29 வயது மகள் 37 கிலோ எடை மட்டுமே இருந்திருக்கிறாள். பிள்ளைகள் மணிக்கட்டுக்கு மேல் கழுவ அனுமதிக்கப்படவில்லை.

பொம்மைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கப்படவில்லை.

பிள்ளைகளைப் பார்க்க வைத்து பெற்றோர்கள் கேக் போன்றவற்றை சாப்பிட்டிருக்கிறார்கள், பிள்ளைகளுக்குக் கொடுக்கவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நாய்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 23ஆம் திகதி மீண்டும் இந்த சித்திரவதைத் தம்பதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்