கர்ப்பிணி தோழியை கொன்று குழந்தையை வெளியில் எடுத்த பெண்: திடுக்கிடும் சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் நிறைமாத கர்ப்பிணி தோழியை கொலை செய்து அவர் வயிற்றில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்த பெண் தற்போது சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.

நியூயோர்கின் பிரான்ங்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சிலிக் சுட்டன் (22), இவர் கடந்த 2015-ல் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரின் காதலர் பேட்ரிக்குடன் அவருக்கு நவம்பர் மாதம் 20-ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுட்டனின் தோழி ஆஸ்லே வேட், தானும் கர்ப்பமாக இருப்பதாக எல்லோரிடமும் கூறியுள்ளார்.

சமூகவலைதளத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சுட்டன் மற்றும் ஆஸ்லே ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுட்டனின் திருமண நாள் வந்தது.

நவம்பர் 20-ஆம் திகதி காலையில் சுட்டன் வீட்டுக்கு வந்த ஆஸ்லே அவருக்கு திருமண பரிசு கொடுப்பதாக கூறி தன் வீட்டுக்கு அவரை அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் சுட்டனை குத்திய ஆஸ்லே அவரின் வயிற்றை கத்தியால் கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்.

இதையடுத்து சுட்டன் பரிதாபமாக உயிரிழக்க அவரின் குழந்தை அதிர்ஷ்டவசமாக பிழைத்து கொண்டது.

இதையடுத்து தனது காதலன் ஆண்ட்ருவுக்கு போன் செய்த ஆஸ்லே தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும், ஆனால் அதற்காக ஒருவரை தான் கொன்றுவிட்டதாக நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரு சம்பவ இடத்துக்கு வந்த பார்த்த பின்னர் பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் பொலிசார் ஆஸ்லேவை கைது செய்தனர், விசாரணையில் அவர் கர்ப்பமாகவே ஆகவில்லை என தெரியவந்தது.

தான் கர்ப்பமாக இருப்பதாக காதலர் ஆண்ட்ரூ உட்பட பலரையும் ஏமாற்றியது தெரியவந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த குழந்தைக்கு ஜெனிசிஸ் என பெயர் வைக்கப்பட்டு தந்தையின் அரவணைப்பில் தற்போது உள்ளது.

கைது செய்யப்பட்ட ஆஸ்லே மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அவருக்கு குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது.

தற்போது சிறையில் இருக்கும் ஆஸ்லே கடைசியாக கூறுகையில், நான் பலரை தொந்தரவு செய்ததற்காக வருந்துகிறேன், இதன் காரணம் என்ன என்று எனக்குத் தெரியும் என கூறியிருந்தார்.

இவ்வளவு கொடூரமான செயலை செய்த ஆஸ்லே சிறையிலேயே இறந்துவிடுவார் என தெரிகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers