சிறைக் கைதியை பாலியல் அடிமையாக்கிய பெண் காவல் அதிகாரி: அதிர வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கைதி ஒருவர் பெண் காவல் அதிகாரியால் பாலியல் அடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிஃபோர்னியாவில் 57 வயதான வில்லியம் கார்டோபா கொலை மற்றும் திருட்டு வழக்குகளின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றுவருகிறார்.

இவர் இருந்த சிறையில் சில்வியா புல்டோ என்பவரும் காவல் அதிகாரியாக இருந்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு தனக்கு உதவியாளராக இருக்குமாறு வில்லியம்மை சில்வியா நியமித்துள்ளார்.

இதனால் சில்வியாவின் அலுவலக அறையிலேயே வில்லியமும் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் வில்லியம் கணிணியில் வேலை செய்து கொண்டு இருக்கும்போது, சிறை காவல் அதிகாரியான சில்வியா வில்லியமிடம் தவறாக நடந்துள்ளார்.

மேலும் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துகொண்டால் வில்லியம் மீது உள்ள வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய உதவியாக ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார்.

இதனால் வேறுவழியின்றி வில்லியம், சில்வியாவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல, சில்வியா தன்னை ஏமாற்றி ஒரு பாலியல் அடிமை போல நடத்துவது வில்லியம் கார்படோவிற்கு தெரியவந்துள்ளது.

இதனால் சில்வியாவின் விருப்பத்திற்கு இணங்க மறுத்துள்ளார் வில்லியம். இதனால் ஆத்திரமுற்ற சில்வியா, வில்லியம் தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றதாக குற்றம் சுமத்தி அவரை 9 மாதங்கள் தனிமை சிறையில் அடைத்துள்ளார்.

இதனிடையே வில்லியம் தன்னை பாலியல் வன்முறை செய்ய முயன்றதாக சில்வியா தொடர்ந்த வழக்கில் சில்வியா குற்றவாளி என கலிஃபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது,

மேலும் வில்லியம் கார்படோவிற்கு 65,414 டொலர் நஷ்டயீடு வழங்கவும் உத்தரவிட்டது. சிறையில் இருந்த கைதி ஒருவரை பெண் காவல் அதிகாரி பாலியல் அடிமையாக பயன்படுத்திய சம்பவம் கைதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்