டிரம்ப் மகனுக்கு வந்த மர்ம அஞ்சலை முகர்ந்த மனைவி மயக்கம்

Report Print Kabilan in அமெரிக்கா
48Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மருமகள் வனேசா, தனது கணவர் ஜூனியர் டிரம்பிற்கு வந்த அஞ்சலை, பிரித்துப் பார்த்ததால் மயக்கமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் மகன், ஜூனியர் டொனால்டு டிரம்ப் தனது தந்தையின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு திங்கட்கிழமையன்று ஒரு அஞ்சல் வந்துள்ளது.

அதனை அவருடைய மனைவி வனேசா டிரம்ப் வாங்கிப் பார்த்துள்ளார். அந்த அஞ்சல் உறையில் வெள்ளி நிறப்பொடி இருந்துள்ளது. அதனை வனேசா முகர்ந்ததால் மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வனேசா முகர்ந்த அந்த பொடியை சோதனை செய்ததில், அது அபாயகரமானதல்ல என்று தெரியவந்துள்ளது.

எனினும், இது மிகவும் வெறுக்கத்தக்க செயல் என்றும், அதிர்ஷ்டவசமாக தன்னுடைய குழந்தைகளுக்கு எந்தவித ஆபத்து ஏற்படவில்லை என்றும் ஜூனியர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து டிரம்ப்பின் மகள் இவாங்கா கூறுகையில், ‘யாரையும் இது போன்று மிரட்டல்கள் மூலம் அச்சுறுத்தக்கூடாது. அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு, ஆந்த்ராக்ஸ் தடவிய அஞ்சல் உறைகள் ஊடக நபர்கள் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் பாதிப்பால் 5 பேர் பலியானதால், வெள்ளை நிறப்பொடி தடவிய அஞ்சல் உறைகள் எதுவும் அனுப்பப்பட்டால், அதிகாரிகள் அதனை எச்சரிக்கையுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்