புதுச் செருப்பு வாங்கப்போய் பிணமாக திரும்பிய குழந்தை

Report Print Balamanuvelan in அமெரிக்கா
629Shares
629Shares
lankasrimarket.com

புது செருப்பு வாங்குவதற்காக பெற்றோருடன் சென்ற இரண்டு வயது குழந்தை ஆளுயர கண்ணாடி தலையில் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Georgiaவில் அம்மாவுடன் புதுச் செருப்பு வாங்கச் சென்ற Ifrah Siddique என்னும் இரண்டு வயது குழந்தை, வாங்கிய புது செருப்பை போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்க்கச் சென்றபோது ஆளுயரக் கண்ணாடி அவளது தலை மீது விழுந்தது.

சத்தம் கேட்டு பதறி ஓடி வந்த குழந்தையின் தாய், இரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மகளை தூக்கிக் கொண்டு Riverdaleஇல் உள்ள Southern Regional Medical Center என்னும் மருத்துவமனைக்கு விரைந்தார்.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

குழந்தையை இழந்து கதறி அழுத நிலையிலும் செருப்புக் கடையின்மீது எந்தக் கோபத்தையும் காட்டாத அந்தக் குழந்தையின் தந்தை இனிமேலாவது யாருக்கும் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியது மனதை நெகிழச்செய்தது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்