நடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு: காட்டிக் கொடுத்த பேஸ்புக் லைவ்

Report Print Fathima Fathima in அமெரிக்கா
103Shares
103Shares
lankasrimarket.com

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற ப்ரான்சஸ் மெக்டார்மண்ட்டிடமிருந்து அவரது விருதை திருடிய குற்றவாளியை பொலிசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் 24 பிரிவுகளின் கீழ் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த நடிகைக்கான விருதை ப்ரான்சஸ் மெக்டார்மண்ட் வென்றார், இதன்பின்னர் நடந்த விருந்தில் கலந்து கொண்ட பெர்ரி ப்ரையண்ட் என்பவர் ப்ரான்சஸின் விருதை திருடியுள்ளார்.

அத்துடன் பேஸ்புக் லைவில் தோன்றியதால் பொலிசிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ், விருதை பறிமுதல் செய்து ப்ரான்சஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்