10 வயது சிறுவனை ஒரு மைல் தொலைவு ஓடவிட்டு தண்டித்த தந்தை: என்ன காரணம் தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா
158Shares
158Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் தந்தை ஒருவர் தமது மகனை தண்டிக்கும் பொருட்டு ஒரு மைல் தொலைவு மழையில் ஓடவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்ஜீனியா மாகாணத்தில் குடியிருக்கும் பிரையன் தோர்ன்ஹில் என்பவரே பாடசாலைக்கு செல்லும் தமது 10 வயது மகனை கொட்டும் மழையில் ஓடவிட்டு, தனது காரில் பிந்தொடர்ந்துள்ளார்.

மட்டுமின்றி, தமது மகனை ஏன் தாம் மழையில் ஓடவிட்டு தண்டிக்கிறேன் என்பதற்கு அவர் ஒரு விளக்கமும் அளித்துள்ளார். தினமும் பாடசாலை வாகனத்தில் வந்து சென்ற குறித்த சிறுவன், அவனது எஞ்சிய நண்பர்களில் ஒருவரை கிண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பாடசாலை நிர்வாகத்தினர் வரையில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் 3 நாட்கள் பாடசாலை வாகனத்தில் செல்ல குறித்த சிறுவனுக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே தோர்ன்ஹில் பாடசாலை செல்லும் தமது மகனை ஓடவிட்டு, தமது காரில் பிந்தொடர்ந்துள்ளார்.மட்டுமின்றி தாம் அளித்த தண்டனை தமது மகனுக்கு நல்ல பாடத்தை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று நாம் எடுக்கும் சின்ன நடவடிக்கைகள் நமது பிள்ளைகளை நல்வபழிப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், குறித்த நபரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் ஆதரவு கிளம்பியுள்ளது. இருப்பினும் சிலர் இந்த விடயத்தை கண்டித்தே கருத்து தெரிவித்துள்ளனர்.

குறித்த தந்தை வெளியிட்டுள்ள அந்த வீடியோவானது இதுவரை 1.6 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்