விமானத்தில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்ட பயணிகள்: அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா
248Shares
248Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் கிளம்ப தயாரான விமானத்தில் இருந்த பயணிகளில் சிலர் ஒருவரையொருவர் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Dallas நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி கிளம்ப சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் இரு தினங்களுக்கு முன்னர் தயாராக இருந்தது.

அப்போது விமானத்தில் நின்றிருந்த ஒரு பயணி, இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒரு பயணி முகத்தில் வேகமாக தாக்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அந்த பயணியை தடுக்க முயன்ற நிலையில் இன்னொரு பயணியையும் அவர் தாக்கினார்.

பின்னர் அவர் பதிலுக்கு தாக்க விமானம் முழுவதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் சண்டையில் ஈடுபட்ட பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றி அவர்களை அழைத்து சென்றார்கள்.

கூச்சல் குழப்பம் முடிவுக்கு வந்த பின்னர் ஒரு மணி நேர தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்