4 வயது தங்கையை துப்பாக்கியால் சுட்ட சகோதரன்: வீட்டில் தாய் இல்லாதபோது விபரீதம்

Report Print Harishan in அமெரிக்கா
121Shares
121Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் தாய் பணிக்கு சென்றிருந்த போது தனது 4 வயது தங்கையை சகோதரனே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ் லேண் பகுதியைச் சேர்ந்தவர் அலிசா எட்வர்ட்ஸ்(27). இவருக்கு 8 வயதில் மகன், 4 வயதில் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அலிசா பணிக்கு செல்லும் பெண்மனி என்பதால் அவர் வீட்டில் இல்லாத போது, இரு குழந்தைகளும் தனியே இருப்பது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அலிசா பணிக்கு சென்றிருந்த போது, வீட்டில் இருந்த சிறுவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுமியை சரமாரியாக சுட்டுள்ளான். சிறுமி இரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் நடந்தவை குறித்து தன் தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளான்.

உடனடியாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அலிசா, சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு பொலிஸில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து பொலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த பொலிசார், சிறுவனை கைது செய்து குழந்தைகள் மையத்தில் அடைத்துள்ளனர். மட்டுமின்றி, சம்பவத்தை பொலிஸில் தெரிவிக்காத தாயார் அலிசாவையும் கைது செய்து அஜாக்கிரதையாக துப்பாக்கி வைத்திருந்த காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்