மூன்று பெண்களை சுட்டுக்கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
206Shares
206Shares
lankasrimarket.com

கலிபோர்னியாவில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மூன்று பெண்களை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மன அழுத்தத்திற்காக முன்னாள் ராணுவ வீரர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மையம் ஒன்று கலிஃபோர்னியாவிலுள்ள Yontville என்னுமிடத்திலுள்ளது.

நேற்றைய தினம் இந்த மையத்தில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த Albert Wong (36) என்னும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சிலரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டார்.

தகவலறிந்து வந்த பொலிசாருக்கும் அவருக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. சுமார் 30 முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக தெரியவந்துள்ளது.

பின்னர் கட்டிடத்தின் உள்ளே நுழைந்த பொலிசார் துப்பாக்கியால் சுட்ட நபர் இருந்த அறைக்குள் நுழைந்தபோது அந்த அறைக்குள் துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபரும் மூன்று பெண்களும் இறந்து கிடந்தனர். Albert Wong அந்தப் பெண்களை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இறந்தவர்கள் Executive Directorஆன Christine Loeber (48), Dr Jen Golick (42) மற்றும் Dr Jennifer Gonzales (29) என்னும் psychologist என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Albert Wong ம் மன அழுத்தத்திற்காக முன்னாள் ராணுவ வீரர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் இந்த மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர் என்றும் கடந்த வாரம் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளில் சிலரை விட்டு விட்டு மீதமிருந்த மூவரை மட்டும் சுட்டுக் கொன்றிருக்கிறார், கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை.

இந்த மையம் Iraq, Afghanistan, Korea, Vietnam, போர்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது காயமடைந்த அல்லது கை கால்கள் இழந்த மற்றும் வயது முதிர்ந்த 1000 ரணுவ வீரர்களை கவனித்துக் கொள்ளும் மையமாகும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்