இது நடந்தால் உலகத்துக்கே நல்லது: டிரம்பின் டுவிட்

Report Print Kavitha in அமெரிக்கா
207Shares
207Shares
lankasrimarket.com

வடகொரியாவுடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இந்த உலகத்துக்கே நல்லது என டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா மிரட்டி வருகிறது.

இந்நிலையில் வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கு முன்பாக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என வடகொரியா வாக்குறுதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்‘வடகொரியாவுடன் சமாதானம் ஏற்படுத்துவது தொடர்பான உடன்படிக்கை தயாரிக்கும் பணி வெள்ளை மாளிகையில் மும்முரமாக நடந்து வருவதாகவும், இது பூர்த்தி அடைந்தால் இந்த உலகத்துக்கு மிகவும் நன்மையாக அமையும். இந்த உடன்படிக்கையில் இருவரும் கையொப்பமிடும் நேரத்தையும், இடத்தையும்தான் இனி முடிவு செய்ய வேண்டும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்