தண்ணீருக்குள் மூழ்கி ஹெலிகொப்டர் விபத்து: சோகமாய் மாறிய சந்தோஷம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
451Shares
451Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் நியூயார்க்கில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகொப்டர் ஒன்று தண்ணீருக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

நியூயார்க்கின் East Riverஇல் நேற்று மாலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

Liberty Helicopter Tours என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான Eurocopter AS350 வகை ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, போட்டோ ஷூட்டுக்காக பயணித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக எஞ்சின் கோளாறால் தண்ணீருக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக விமானி தண்ணீரை விட்டு மேலே வந்த நிலையில் உயிர்பிழைத்தார், மற்றவர்கள் பெல்ட்டை விடுவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அதற்குள் ஹெலிகொப்டரும் 50 அடிக்கும் கீழே சென்றதால், மற்றவர்களால் வெளியே வரமுடியவில்லை.

உடனடியாக மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, ஹெலிகாப்டருக்குள் சிக்கிக் கொண்டிருந்தவர்களில் மூவர் மீட்கப்பட்டனர், மற்ற இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயரிழந்தனர்.

மீட்கப்பட்டவர்களின் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்