கடற்படை விமானி பார்த்தது செவ்வாய்க் கிரகத்து பறக்கும் தட்டா: வீடியோவால் பரபரப்பு

Report Print Balamanuvelan in அமெரிக்கா
132Shares
132Shares
lankasrimarket.com

கடற்படை விமானிகள் பறக்கும் தட்டு போன்ற ஒரு பொருளை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அது என்ன? எந்த கிரகத்தைச் சேர்ந்தது என்னும் கேள்விகளுக்கான எந்த பதிலும் யாரிடமும் இல்லை.

வானில் பறக்கும் UFO என்றழைக்கப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை அடையாளம் காணுவதற்காக தொடங்கப்பட்ட ஆய்வு ஒன்றை கிடப்பில் போட்டு விட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பெண்டகன் கடந்த ஆண்டு அறிவித்ததைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத விமானம் போன்ற ஒன்று பறக்கும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

"GO FAST" என்று பெயரிடப்பட்ட இந்த வீடியோவை To The Stars Academy of Arts and Science என்னும் அமைப்பு சென்ற வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அது பாதுகாப்புத்துறையிடமிருந்து பெறப்பட்ட அதிவேக அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்றின் வீடியோ என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

பெண்டகன் அந்த வீடியோ குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. வானில் பறக்கும் UFO என்றழைக்கப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை அடையாளம் காணுவதற்காக தொடங்கப்பட்ட ஆய்வின் முன்னாள் தலைவராக இருந்த Luis Elizondo இப்போது நாம் பார்ப்பது ஒரு வீடியோதான் என்றும் இதுபோல் பல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணப்படும் விமானம் போன்ற பொருளும் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வீடியோக்களில் காணப்பட்ட உருவங்களும் ஒரேபோல் காட்சியளிப்பதாகவும், அது மட்டுமன்றி பல விடயங்கள் ஒத்துப்போவதாகவும் தெரிவித்தார்.

அது ஒரு சிறிய விமானம் போல் காட்சியளித்தாலும், அது என்ன ? அது ரஷ்யா அனுப்பியதா? சீனா அனுப்பியதா? அல்லது செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்ததா? அது என்னவாக இருந்தாலும் அது என்னவென்று தெரியாததால் அதைக் குறித்து நிச்சயம் கவலைப்பட்டுதான் ஆக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்