140 பயணிகளுடன் சென்ற விமானத்தில் திடீர் துர்நாற்றம்: அவசர கால வழியாக தப்பி ஓடிய மக்கள்

Report Print Santhan in அமெரிக்கா
1648Shares
1648Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அவசர கால வழியாக அலறி அடித்து ஓடியுள்ளனர்.

அமெரிக்காவின் Dallas-லிருந்து Phoenix-க்கு கடந்த ஞாயிறு அன்று போயிங் 737 ரக விமானம் 140 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

அப்போது விமானத்தில் திடீரென்று துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் பீதியில் அலறியதால், உடனடியாக விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணிகள் அனைவரும் அவசரகால வழியாக வெளியேற்றப்பட்டனர். அது தொடர்பான காட்சிகளை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

உயிர்பயத்தின் காரணமாக மக்கள் அவசர அவசரமாக வெளியேறுகின்றனர். அந்த நேரத்தில் ஒருவர் யாரும் பயப்பட வேண்டாம், பீதியடைய வேண்டாம் என்று கூறுகிறார்.

இதன் காரணமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், துர்நாற்றம் காரணமாகவே தரையிரக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்