மனைவியைக் கொன்றுவிட்டு பாவ மன்னிப்பு கேட்ட கணவன்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
81Shares

அமெரிக்காவில் நபர் ஒருவர் தன் மனைவியை கொன்றுவிட்டதாக கூறி தேவாலயத்துக்கு வந்து பாவ மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள Pennsylvaniaவைச் சேர்ந்தவர் John P Grazioli(வயது 44), சமீபத்தில் St Peter Cathedralஇல் நுழைந்த John P Grazioli, அங்குள்ள பாதிரியாரிடம் தன் மனைவியை கொன்றுவிட்டதாக பாவமன்னிப்பு கேட்டுள்ளார்.

ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் John P Grazioliக்கும் Amanda Grazioliக்கும் திருமணம் நடந்தது, John P Grazioli ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவரை மணமுடித்தார்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் அவர் தனது மனைவியாகிய Amanda Grazioliஐ துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இது பாவ மன்னிப்புக் கேட்பதற்குரிய விடயம் அல்ல என்று கூறிய பாதிரியார், பொலிசாரிடம் தகவலளிப்பதுதான் சரி என்று கூறியிருக்கிறார்.

இதற்கு John P Grazioli சம்மதிக்க, பாதிரியார் பொலிசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார், விரைந்து வந்த அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையில் John P Grazioliக்கும் அவரது முன்னாள் மனைவிக்கும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது யார் என்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் அப்பாவியான Amanda Grazioli உயிரை விட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்