கொடிய விஷமுடைய பாம்பு கடித்தது: உயிருடன் வலம்வரும் அதிசய நபர்

Report Print Athavan in அமெரிக்கா

மிகக் கொடிய விஷப்பாம்புகளை தன்னை கடிக்க வைத்ததன் மூலம் உலகின் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மனிதராக அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த டிம் ஃபிரைடு என்பவர் பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார்

இயற்கையிலேயே அதீத நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட இவர், தன்னை சுயபரிசோதனை செய்யும் வண்ணம் உலகின் கொடிய விஷம் கொண்ட ஆப்பிரிக்காவின் கருப்பு மாம்பா என்ற பாம்பினை தன்னைக் கடிக்க வைத்து காட்டியுள்ளார்.


அவர் பதிவு செய்த வீடியோ காட்சியில் பிளாக் மாம்பா பாம்பு ஒன்று, அவரின் விரல்களால் சுற்றி, பின்னர் அவரது கையில் மூன்று முறை கடிக்கிறது, அடுத்ததாக அவரின் கைகளில் விஷம் ஏறியதால் உடனடியாக பாம்பு கடித்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது.

அவர் பாம்பை கடிக்கச் செய்ததன் மூலம் அந்த கொடிய பாம்பின் விஷம் அவரின் உடலில் சென்று இருக்கலாம்.

ஆனால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அடுத்த 15 நிமிடங்களில் தனது அலுவலகப் பணிகளை மேற்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Image: Caters News Agency)

இந்த கொடிய விஷம் கொண்ட கருப்பு மாம்பா பாம்பினை கடிக்கவைத்த ஒருவர் மிகச்சிறந்த விஷ எதிர்ப்பு மனிதனாக அறியப்பட்டுள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளாக ஏழு பாம்புகளை தன் மீது கடிக்கவிட்டு இந்த விஷ எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவருகிறேன்.

என்னுடைய நோக்கம் உலகலாவிய மனித விஷ எதிர்ப்பு சக்தி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என தெரிவித்துள்ளார்.

(Image: Caters News Agency)
(Image: Caters News Agency)
(Image: Caters News Agency)

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்