சுற்றுலா பயணிக்கு மரண பயத்தை காட்டிய சிறுத்தை: பீதியில் உறைந்து நின்ற நிமிடங்கள்

Report Print Santhan in அமெரிக்கா

ஆப்பிரிக்காவில் சுற்றுலாப்பயணி ஒருவருக்கு சிறுத்தை மரணபயத்தை காட்டியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டில் உள்ள Serengeti என்ற பகுதியில் உள்ள தேசிய பூங்காவின் விலங்குகள் இருக்கும் பகுதிக்கு அமெரிக்காவின் வாசிங்டன் பகுதியைச் சேர்ந்த Britton Hayes என்பவர் தனது நண்பர்கள் மற்றும் வழிகாட்டியுடன் காரில் சென்றுள்ளனர்.

அப்போது ஒரு புறம் விலங்குகளை பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக Britton Hayes-க்கு பின்புறம் சிறுத்தை ஒன்று நின்றுள்ளது.

இதனால் பீதியடைந்த Britton Hayes என்ன செய்வதென்று புரியாமல் நின்றுள்ளார். அப்போது வழிகாட்டி சிறுத்தையின் கண்ணை பார்க்க வேண்டாம் எனவும், சற்றும் அசையாமல், பதட்டப்படாமல் இருக்கும் படி கூறியுள்ளார்.

உள்ளே வந்த சிறுத்தை அவரின் அருகில் வந்து நின்று, அவரை முகர்ந்து பார்த்துவிட்டு சென்றுள்ளது.

இது குறித்து Britton Hayes கூறுகையில், நான் இறந்துவிடுவேன் என்று தான் நினைத்தேன், பீதியில் உறைந்து போய் நின்றேன், அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்