5 வயது மகனை கொலை செய்து சடலத்தை மறைத்து வைத்த அப்பா

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 5 வயது மகனை கொலை செய்து சடலத்தை மறைத்து வைத்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tennessee மாகாணத்தை சேர்ந்தவர் ஜோசப் ரே டேனியல்ஸ் (28). இவரின் மகன் ஜோ சில்டி (5). ஜோ ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவனால் பேசவும் முடியாது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜோ திடீரென காணாமல் போயுள்ளான்.

இது குறித்து அவனின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் சிறுவனை தேடி வந்தார்கள்.

இதையடுத்து தனது வீட்டிலிருந்து நூறு அடி தூரத்தில் உள்ள மறைவான இடத்தில் ஜோ நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

மோப்ப நாய் மற்றும் கைரேகை உதவியுடன் பொலிசார் கொலையாளியை தேடி வந்த நிலையில் ஜோவை அவன் தந்தை ஜோசப்பே கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஜோசப்பை கைது செய்துள்ள பொலிசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்