மாஃபியா தலைவன் போல வெள்ளை மாளிகையை நடத்தும் டிரம்ப்: FBI முன்னாள் இயக்குனர்

Report Print Athavan in அமெரிக்கா
166Shares
166Shares
ibctamil.com

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மிகவும் ஆரோக்கியத்துடன் இருந்தாலும், அவர் ஒழுக்கமில்லாத நபர் என எஃப்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமே விமர்சித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

இவர் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா தான் காரணம் என்றும், ரஷ்ய ஹாக்கர்களின் உதவியின் மூலமாக டிரம்ப் வெற்றியை வசப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, எஃப்.பி.ஐ அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணை நடந்துகொண்டிக்கும் போதே எஃப்.பி.ஐ இயக்குனர் பதவியிலிருந்து ஜேம்ஸ் கோமி நீக்கப்பட்டார். இதனால், டிரம்ப் மற்றும் கோமி இடையே பகிரங்கமாகவே வார்த்தைப் போர் நடந்தது.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள கோமி, கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம் மற்றும் டிரம்ப்புடனான பழக்கம் குறித்து விளக்கினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், மாஃபியா தலைவன் போல வெள்ளை மாளிகையை நடத்துவதாக, ஜேம்ஸ் கோமே எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புத்தகம் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜேம்ஸ் கோமே பேட்டியளித்தார். அதில், அதிபர் டிரம்ப், ஆரோக்கியம் இல்லாதவர் என்றோ, மனநலம் சரியில்லாதவர் என்றோ கூற முடியாது என ஜேம்ஸ் கோமே தெரிவித்தார்.

ஆனால், டிரம்ப் ஒழுக்கமில்லாத நபர் என்று விமர்சித்த ஜேம்ஸ் கோமே, அவர் மரியாதைக்குரியவராக நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஆனால் அவ்வாறு இருக்க அதிபர் டிரம்ப்-பால் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டிரம்ப்பிற்கு எதிராக கிட்டத்தட்ட 22 பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. மேலும், ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியலுடன் டிரம்ப் நீண்ட காலமாக தகாத உறவு வைத்திருந்ததாகவும் மற்றுமொரு குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பின், டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹெனின் மன்ஹாட்டன் அலுவலகத்தில், ஆயுதம் ஏந்திய எஃப்.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், டிரம்ப்பின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக சில கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்