நீ கழிவறைக்கு செல்லக்கூடாது! கருப்பினத்தவர் மீது இனவெறி தாக்குதல்... வைரல் வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா
237Shares
237Shares
ibctamil.com

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற உணவகத்துக்கு வந்த கருப்பினத்தவரை அங்குள்ள கழிவறையை பயன்படுத்தக்கூடாது என கடை மேலாளர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Philadelphia-ல் அமைந்துள்ள ஸ்டார்பக்ஸ் என்னும் உணவகத்துக்கு ஆப்பிரிக்க - அமெரிக்க கருப்பினத்தவர்கள் இருவர் வந்தனர்.

தங்களுடைய நண்பர் ஒருவரின் வருகைக்காக அவர்கள் காத்திருந்ததால் உணவுகள் எதுவும் வாங்காமல் வெறுமனே உட்கார்ந்திருந்தனர்.

இருவரில் ஒருவர் உணவகத்தில் இருந்த கழிவறையை உபயயோகப்படுத்த நினைத்த போது உணவகத்தின் பெண் மேலாளர் அவருக்கு அனுமதி மறுத்துள்ளார்.

இதையடுத்து மேலாளரிடம் சென்ற அந்த நபர், வெள்ளையாக இருந்த ஒரு நபரை மட்டும் கழிவறைக்குள் அனுமதித்தீர்கள், நான் கருப்பாக இருப்பதால் அனுமதி மறுக்கிறீர்களா என கேட்டுள்ளார்.

இதற்கு முதலில் பதில் சொல்லாத பெண் மேலாளர் பின்னர், பணம் கொடுத்து உணவு வாங்குபவர்கள் மட்டும் தான் கழிவறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள், நீங்கள் அல்ல என கூறியுள்ளார்.

ஆனால் இதை ஏற்காத அந்த கருப்பினத்தவர், வெள்ளையாக இருந்தவரும் எந்த உணவும் வாங்காத நிலையில் அவரை ஏன் கழிவறைக்குள் அனுமதித்தீர்கள் என மேலாளருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இது குறித்து உணவகம் சார்பில் பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அங்கு வந்த பொலிசார் இரண்டு பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்நிலையில் மேலாளரின் செயலுக்கு தான் மன்னிப்பு கேட்பதாக உணவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், இது இனவெறி தாக்குதல் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்