அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் மனைவி காலமானார்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
183Shares

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் காலமாகியுள்ளார்.

அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

இந்நிலையில், பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்பரா புஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்-ஐ கடந்த 1941 ஆம் ஆண்டு முதன் முறையாக சந்தித்த பார்பரா 1945 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

நீண்ட 72 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த புஷ் பார்பரா தம்பதியினர், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் திருமண உறவில் நீடித்திருந்த ஜனாதிபதி தம்பதியர் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் இருந்த காலகட்டத்தில் குடும்ப கல்வியறிவுக்கான புகழ்பெற்ற அறக்கட்டளை ஒன்றை பார்பரா புஷ் துவங்கினார்.

பார்பரா புஷ்-ன் மறைவுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்