தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்த மகள்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தந்தையின் சிறுநீரகங்கள் செயலற்றுப்போனதால் இரண்டாண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என்ற செய்தி கேட்டதும் ஒரு கணம் கூட யோசிக்காமல் தனது சிறுநீரகங்களில் ஒன்றை தனது தந்தைக்கு தானமாக வழங்கியுள்ளார் ஒரு மகள்.

எட்டரை மணி நேர ஆபரேஷனுக்குப் பின் அவ்வளவு வலியையும் தாங்கிப் பிடித்துக்கொண்டு முதன் முறையாக தந்தையை அவர் வந்து பார்க்க, தந்தையும் மகளும் சந்திக்கும் கண்ணீர் தருணங்களைப் பதிவு செய்துள்ள வீடியோ காண்போர் கண்களை நிச்சயம் குளமாக்கும்.

அமெரிக்காவைச் சேர்ந்த Hailee Stender (30)இன் தந்தை ஜான், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜானுக்கு இரண்டு பெண்கள், Hailee Stender அவரது சகோதரி AnaRosa. AnaRosa ஜானின் தத்துப்பிள்ளை.

Haileeக்கு தனது திருமணத்தில் தனது தந்தை தன்னை கரம்பற்றி அழைத்து வர வேண்டும் என்று கொள்ளை ஆசை.

தந்தைக்கு சிறுநீரகம் வழங்கிய Hailee, அவருடைய இரத்தம் நான், இனி அவரது உடலிலும் நான் இருக்கிறேன் என்று உணர்வுபூர்வமாக தெரிவிக்கிறார்.

அப்பாவுடைய உயிரை காப்பாற்ற உதவியதை நான் கௌரவமாக நினைக்கிறேன் என்கிறார் Hailee.

எட்டரை மணி நேர அறுவை சிகிச்சை முடிந்து கடுமையான வலியுடன் வீல் சேரில் தனது தந்தையைப் பார்க்க வருகிறார் Hailee.

அப்பாவைப் பார்த்ததும் கண்ணீர் பெருகுகிறது மகளுக்கு. மகளின் நெற்றியில் பாசம் பொங்க முத்தமிடுகிறார் அப்பா.

இந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளை தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார் ஜானின் இன்னொரு மகளான AnaRosa.

காண்போரின் மனதை நெகிழச் செய்து கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது இந்த வீடியோ.

Caters News Agency
Caters News Agency
Caters News Agency
Caters News Agency

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்