149 பயணிகளுடன் நடுவானில் வெடித்து சிதறிய விமான இன்ஜின்: இரண்டு குழந்தைகளின் தாய் பலி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் நடுவானில் விமான இன்ஜின் திடீரென்று வெடித்துச் சிதறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள LaGuardia விமான நிலையத்தில் இருந்து Dallas-ற்கு Southwest நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு இன்ஜின்கள் கொண்ட Boeing 737 என்ற விமானம் நேற்று 149 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதிபயங்கரமாக சத்தம் கேட்டதுடன், விமானத்தின் ஜன்னல் மீது ஏதோ ஒரு பொருள் வந்து விழுந்ததால், ஜன்னல் உடைந்துள்ளது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக அவசர கால உதவியாக அவர்களுக்கு ஆஜ்ஸிஜன் மாஸ்க் போன்றவைகள் பயன்படுத்தும் படி விமான ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

விமானத்தின் வலது புறம் இன்ஜின் தொழில் நுட்ப கோளாறு காரணமாக வெடித்ததால், விமான ஓட்டுனர் ஒற்றை இன்ஜினுடன் பயணிகள் அனைவரையும் பத்திரமாக Philadelphia பகுதியில் தரையிரக்கினார்.

இந்த சம்பவம் காரணமாக சிலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்த நிலையில், New Mexico-வின் Albuquerque பகுதியைச் சேர்ந்த Jennifer Riordan(43) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் வங்கி அதிகாரியாக இருந்துள்ளார். தன்னுடைய வேலை காரணமாகவே குறித்த விமானத்தில் பயணித்த இவர், ஜன்னல் உடைந்தற்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த இன்ஜின் விபத்தின் காரணமாக மேலும் 7 பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்