நடுவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து மீண்டது எப்படி? விமானியின் உருக்கமான பதிவு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்றின் என்ஜின் நடுவானில் வெடித்துச் சிதறிய நிலையில், அதில் இருந்த 143 பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கியது எப்படி என அதன் விமானி உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று Southwest Airlines விமானம் ஒன்று 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் ஒருபக்க என்ஜின் நடுவானில் வெடித்துச் சிதறியது.

அந்த விபத்தில் சிக்கிய பெண் பயனி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், குறித்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

56 வயதான Tammie Jo Shults முன்னாள் கடற்படை விமானி எனவும், F-18 ரக போர் விமானங்களை இயக்கிய ஒருசில பெண் விமானிகளில் ஒருவர் எனவும் கூறப்படுகிறது.

அதனால் தான், நடுவானில் விபத்து ஏற்பட்ட பின்னரும், உயிர் பயத்தில் பயணிகள் அலறும் நிலையிலும், கட்டுப்பாட்டை இழக்காமல் ஒற்றை என்ஜினுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.

விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும், முதன் முதலாக காயமடைந்த பெண் பயணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பயணிகள் அருகே வந்த Shults ஒவ்வொருவரையும் தேற்றியுள்ளார். ஆனால் பயணிகள் தங்கள் உயிரை காத்தமைக்காக அவருக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

உண்மையில் சாகச வீரர்களை நாங்கள் நேரில் பார்த்ததில்லை, ஆனால் Shults உண்மையில் ஹீரோ என தெரிகிறார்

என அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஒரு இக்கட்டான நிலையில் துளியும் அஞ்சாமல் சமயோசிதமான முடிவை மேற்கொண்டமைக்கு விமானி Shults மற்றும் விமான ஊழியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார் ஒரு பயணி.

அமெரிக்க கடற்படையில் இருந்து ராஜினாமா செய்த பின்னர் 1993 ஆம் ஆண்டில் Southwest Airlines விமான சேவையில் இணைந்துள்ளார்.

மெக்சிகோ நாட்டவரான Tammie Jo Shults தற்போது தமது விமானி கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் டெக்சாஸ் மாகானத்தில் குடியிருந்து வருகிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்