50 துஷ்பிரயோகங்கள்,12 கொலைகள்! தேடப்பட்ட குற்றவாளி கைது: வெளியான தகவல்கள்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த செவ்வாய் கிழமை முன்னாள் பொலிஸ் அதிகாரியான James DeAngelo(72) இரண்டு கொலைகளுடன் தொடர்பிருப்பதாக கூறி கைது செய்யப்பட்டார்.

அதிகாரிகளும் கொலை தொடர்பாகவே கைது செய்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உள்ளூர் ஆங்கில் ஊடகம் ஒன்று பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி தான் இவர் என்று குறிப்பிட்டுள்ளது.

அதில், அமெரிக்காவில் கடந்த 1976-1978 காலக்கட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை இவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாகவும், 12-க்கும் மேற்பட்டோரை கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர்களில் 13-வயது பெண்களும் அடங்குவார்கள் எனவும், அமெரிக்காவின் Sacramento மற்றும் Central Valley பகுதிகளில் மட்டும் 37 பேரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 1986-ஆம் ஆண்டு Bay Area பகுதியில் இரண்டு பேர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் இருந்து கிடைத்த டி.என்.ஏவை வைத்தே இவர் சிக்கியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி கடந்த 1976-ஆம் ஆண்டு Carson-Handle என்ற பெண்கள் இவரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர்கள் என்பதால் அவர்களுக்கு இவர் கைது செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிவித்த பின்பு தான் இது வெளியில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழையும் இவர் தனியாக இருக்கும் பெண்களை பாலியல் துன்புறுத்தல்கள் செய்வதுடன், அங்கு ஆண்கள் யாரும் இருந்தால் அவர்களை கட்டி வைத்து, அவர்கள் மேல் பாத்திரங்களை வைத்துவிடுவாராம்.

அந்த பாத்திரங்கள் கீழே விழுந்துவிட்டால் உடனடியாக அவர்களை சுட்டுத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிவிடுவாராம்.

இந்த நபர் குறித்து பாதிப்புக்குள்ளானவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து பொலிசார் அப்போது இருந்தே தேடி வந்தனர்.

ஆனால் கையில் சிக்காமல் இருந்துள்ளார். இதனால் இந்த நபர் குறித்து தகவல் தெரிவித்தால் $50,000 சன்மானம் வழங்கப்படும் என்று பொலிசார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.

அப்போது பொலிசார் இவருக்கு 60 வயது இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட நபரின் வயது 72 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers