அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்த தமிழர்

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவில் தமிழக இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மவுண்டன் கியூ நகரில் சடலமாக இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டார்.

அவரை பற்றிய அடையாளம் ஏதும் தெரியாததால் கவுண்டியில் உள்ள மருத்துவமனையில் வைத்திருந்தனர்.

இதுதொடர்பான விசாரணையில் குறித்த இளைஞர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், நண்பர்களை காணவந்த போது துரதிஷ்டவசமாக இது நடந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகித்தனர்.

இதன்படி கவுண்டி பொலிசார் தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். இதனை தொடர்ந்து தூதரக அதிகாரிகள் கலிபோர்னியாவில் உள்ள தமிழ் மன்றத்தின் உதவியை நாடினர்.

பேஸ்புக், வாட்ஸ் அப் வழியாக கோரிக்கை விடுத்ததில் இறந்தவர் தமிழ்நாட்டின் விழுப்புரம் விக்கிரவாண்டியை சேர்ந்த கவியரசன் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers