கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? டிரம்ப் விளக்கம்

Report Print Kabilan in அமெரிக்கா

வடகொரியாவில் சிறை வைக்கப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க பணம் கொடுக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களான கிம் சாங்-டக், கிம் ஹாக்-சாங், கிம் டாங்-சுல் ஆகிய மூவரும் கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் மூவரும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, விடுவிக்கப்பட்ட கைதிகளுடன் அமெரிக்காவுக்கு வந்தடைந்தார்.

அப்போது, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இருவரும் அவர்களை நேரில் சென்று வரவேற்றனர்.

இந்நிலையில், இண்டியானா மாகாணத்தில் பேசிய டொனால்டு டிரம்ப் கூறுகையில், வடகொரிய தலைவர், தனது செயல் மூலம் தனது நாட்டிற்கு மிகப்பெரிய சேவையை செய்துள்ளார். வடகொரியாவால் பிடித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் மிகவும் கண்ணியத்தோடு வந்துள்ளனர்.

இவர்களை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் எதையும் நாங்கள் கொடுக்கவில்லை. ஆனால், ஒபாமா அரசு 1.8 பில்லியன் டொலர் தொகையை ஈரானுக்கு கொடுத்து 5 அமெரிக்க கைதிகளை விடுவித்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...