அமெரிக்க பள்ளியில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் பலர் பலி என தகவல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மாணவர்கள் பலர் இறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு தெற்கே 40 மைல்களுக்கு தொலைவில் உள்ள சாண்டாபோ பகுதியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், மாணவர்கள் பலர் இறந்திருப்பதாகவும், சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தின் காரணமாக பள்ளி தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், பள்ளியில் காலையில் வகுப்புகள் தொடங்கியவுடன் தாக்குதல்தாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாகவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், தான் தனது காலை வகுப்பில் இருந்துபோது இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும், ஒரு பெண் இந்த துப்பாக்கிசூட்டில் காயமடைந்ததை தான் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுதுப்பாக்கி ஒன்றை ஏந்திய ஒருவர் பள்ளியில் நுழைந்த உடனே சுட ஆரம்பித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்