பறக்கும் விமானத்தில் சிறு நீர் கழித்த நபர்: முகம் சுழித்த பயணிகள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் சிறு நீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலராடோ மாகாணத்தில் இயங்கும் உள்ளூர் விமான சேவை நிறுவனத்தின் விமானத்திலேயே குறித்த நபர் சிறு நீர் கழித்துள்ளார்.

இச்சம்பவம் விமானத்தில் உள்ள கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தெரிவிக்கையில்,

தொடர்புடைய நபர் அதிக மது அருந்தியதாகவும், அவரது முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண் குரல் எழுப்பி திட்டவும், விமான ஊழியர்கள் தலையிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நபரை விமானத்தின் பின் இருக்கையில் அமரும்படி பணித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த நபர் திடீரென்று இருக்கையில் அமர்ந்தவாறே சிறு நீர் கழித்துள்ளார். இதைக் கண்டிருந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூச்சலிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் விமானிக்கு தெரியப்படுத்தவும், அவர், பொலிசாருக்கு தகவல் தெரிவித்து, குறித்த பயணி டென்வர் விமான நிலையத்தில் இறங்கவும், அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers