வடகொரிய ஜனாதிபதியுடன் சந்திப்பு நிகழுமா? டிரம்ப் விளக்கம்

Report Print Kabilan in அமெரிக்கா

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு நிகழுமா என்பது குறித்து, அடுத்த வாரம் தெளிவாக தெரிய வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வரும் ஜூன் 12ஆம் திகதி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

ஆனால், தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாலும், அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட வேண்டும் என வற்புறுத்தியதாலும், டிரம்ப்புடனான சந்திப்பை ரத்துச் செய்யப் போவதாக கிம் ஜாங் உன் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக, இந்த சந்திப்பு நிகழுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த டிரம்ப் கூறுகையில்,

‘சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சந்திப்பு குறித்து, அடுத்த வாரம் தெரிய வரும். திட்டமிட்டபடி அந்த சந்திப்பு நடந்தால், வடகொரியாவுக்கு சிறப்பானதாக அமையும்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சீனாவின் ஜனாதிபதி ஸீ ஜின் பிங்கை சந்தித்த பிறகே, கிம் ஜாங் உன் தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Getty Images

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...