குழந்தைகளை தவறான நோக்கத்திற்காக கடத்துவதாக சந்தேகிக்கும் முன்னாள் ராணுவத்தினர்: மறுத்த பொலிசார்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் Tucson என்னும் மலைகள் நிறைந்த பகுதியில் தங்கள் பகுதியின் பாதுகாப்புக்காக ரோந்து செல்லும் முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய குழு ஒன்று குழந்தைகளை தவறான நோக்கத்திற்காக கடத்தி வைக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் ஒரு இடத்தைக் கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

தரைக்கு கீழ் ஒரு பதுங்கு குழியும், ஒரு குழந்தையைக் கட்டி வைக்கும் அளவில் கட்டுவதற்கான உபகரணங்களுடன் ஒரு மரமும், அதில் ஒரு குழந்தை பொறித்து வைத்துள்ள பெயரும் என பெரிய அளவில் சந்தேகப்படும் வகையில் ஒரு இடம் அமைந்துள்ளது.

அது மட்டுமின்றி குழந்தைகளின் பொம்மைகளும், தலை முடியுடன் கூடிய சீப்புகளும், உள்ளாடைகளும் ஆபாசப்படங்களும் கூட அங்கு காணப்பட்டன. அந்த பதுங்கு குழியின் நுழைவாயில் ஒரு ஆள் மட்டுமே நுழையும் அளவில் காணப்படுகிறது.

இவற்றைக் கண்டுபிடித்தவர்கள், இது குழந்தைகளைக் கடத்தும் ஒரு கும்பல், குழந்தைகளை அடைத்து வைப்பதற்காக பயன்படுத்தும் மறைவிடம் என கருதுகின்றனர்.

அங்கு கிடைத்துள்ள சந்தேகத்திற்குரிய பொருட்களை வைத்துப் பார்க்கும்போது கடத்தப்பட்ட குழந்தைகள் இந்த பதுங்கு குழியில் அடைத்து வைக்கப்பட்டோ அல்லது அந்த மரத்தில் கட்டி வைக்கப்பட்டோ துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தபோது அங்கு வந்த பொலிசார் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டனர்.

என்றாலும் திருப்தியடையாத குழுவினர் அங்கு ”நீ எங்கள் இடத்திற்கு வந்து விட்டாய், குழந்தைகளை சேதப்படுத்தியிருக்கிறாய், உன்னை விடமாட்டோம்” என்று எழுதிய அட்டைகளை ஆங்காங்கே ஒட்டி வைத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers