நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்: புகார் தெரிவித்த 100 பெண்கள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை கூடத்தில் ஆடிப்பாடி கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்ததால், பாதிக்கப்பட்டதாக சுமார் 100 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவரான Windell Boutte தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணராக செயல்பட்டு வருகிறார்.

இவர் தனது மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை கூடத்தில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, இடையிடையே பாடல்களை ஒலிக்கவிட்டு ஆடிப்பாடி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இவ்வாறு ஆடிப் பாடும்போது எடுத்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றமும் செய்துள்ளார்.

அதில், அறுவை சிகிச்சைக்காக நோயாளி மயக்க நிலையில் படுத்திருக்க, அருகில் மருத்துவர் வெண்டெல் நடனமாடுகிறார். அவரது உதவியாளர்களும் சேர்ந்து ஆடுகின்றனர்.

அவரிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் நோயாளிகள் பலர் இந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஒருவேளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு மருத்துவரின் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என சுமார் 100 பேர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவர் விண்டெலுக்கு எதிராக சில பெண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மட்டுமின்றி மருத்துவர்ர் விண்டெலிடம் சிகிச்சை பெற்ற பிறகு நோய்த்தாக்கம், தொற்றுநோய்கள் மற்றும் மூளை பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் மருத்துவரோ, அவரது மருத்துவமனை தரப்பில் இருந்தோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers