டிரம்ப் மேற்கோள் காட்டும் ஓட்டோ வார்ம்பையர் யார்?

Report Print Balamanuvelan in அமெரிக்கா
82Shares
82Shares
ibctamil.com

வட கொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்புக்குப் பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஓட்டோ வார்ம்பையர் என்னும் ஒருவரைப் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.

யார் அந்த ஓட்டோ வார்ம்பையர் ?

அவருக்கும் கிம்முடனான டிரம்பின் சந்திப்புக்கும் என்ன தொடர்பு?

பத்திரிகையாளர் ஒருவருக்கு கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்கப்பட்டபோது, அவர், நீங்கள் இன்று சந்தித்த இந்த மனிதர், கிம் ஜாங் உன், தனது குடும்ப உறுப்பினர்களைக் கொன்றிருக்கிறார், தனது நாட்டு மக்களை பட்டினி போட்டிருக்கிறார், மேலும் ஓட்டோ வார்ம்பையரின் சாவுக்கும் காரணமானவர், அப்படியிருக்கும்போது, அவரை எப்படி உங்களால் மிகுந்த திறமையுள்ளவர் என்று எந்த குற்ற உணர்ச்சியுமின்றி கூற முடிகிறது என்னும் ஒரு கேள்வியை டிரம்பின் முகத்துக்கு நேராக கேட்டார்.

அவருக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், அவர் மிகுந்த திறமையுள்ளவர்தான், 26 வயதில் பொறுப்பேற்றுக் கொண்டு நிர்வாகம் செய்கிறார், அதுவும் திறம்பட நிர்வாகம் செய்கிறார்.

அவர் அருமையானவர் என்று நான் கூறவில்லை, அவர் வயதில் வெகு சிலர் மட்டுமே, சொல்லப்போனால், பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே இப்படி இருக்க முடியும். ஓட்டோ வார்ம்பையரைப் பற்றிக் கேட்டீர்கள், அவர் ஒரு மிக சிறப்பான நபர், எனது வாழ்வில் அவரது நினைவுகள் மிக நீண்ட காலத்திற்கு இருக்கும், அவரது பெற்றோர் என்னுடைய நல்ல நண்பர்கள்.

ஆனால் என்னைப் பொருத்தவரை ஓட்டோ வார்ம்பையர் இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வே நடைபெற்றிருக்காது.

அவரது மரணத்திற்கு பின் தான் பல விடயங்களை உலகம் கவனிக்க ஆரம்பித்தது, வட கொரியா உட்பட. ஓட்டோ வார்ம்பையர் சும்மா இறக்கவில்லை. அவரது மரணம் வீணான ஒன்றல்ல, அவரது மரணம்தான் இன்று இப்படிப்பட்ட ஒரு சந்திப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

அதிபரின் இத்தனை புகழ்ச்சிக்கு காரணமான 22 வயதான ஓட்டோ வார்ம்பையர், வட கொரியாவில் பிரச்சார போஸ்டர் ஒன்றை திருட முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

சிறையிலிருக்கும்போதே கோமாவுக்கு சென்ற அவர் விடுவிக்கப்பட்டு அமெரிக்கா வந்து ஆறு நாட்களில் இறந்து போனார். அன்றிலிருந்துதான் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்குமான பகை உருவாயிற்று.

அவரைக் குறித்து தான் அந்த பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார் என்பதும், டிரம்பும் ஓட்டோ வார்ம்பையரின் மரணம் இன்று பல அமைதி நடவடிக்கைகளுக்கு வழி வகுத்துள்ளது என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்