அமெரிக்காவில் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்த முன்னணி தயாரிப்பாளர் கைது!

Report Print Trinity in அமெரிக்கா
120Shares
120Shares
ibctamil.com

சிகாகோவில் இந்தியாவை சேர்ந்த தெலுங்கு திரையுலக நடிகைகளை வைத்து அமெரிக்காவில் பாலியல் தொழில் செய்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த கிஷன் மொதுகுமுடி என்கிற ஸ்ரீராஜ் சொன்னுப்பட்டி(34) அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வசித்து வருகிறார். அவருடைய மனைவி சந்திரா(31). அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொழில் அதிபரான கிஷன் பல ஹிட்டான தெலுங்கு படங்களையும் தயாரித்துள்ளார்.

அமெரிக்காவில் நடக்கும் கலாசார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பதாகக் கூறி தெலுங்கு திரையுலகில் போராடிக் கொண்டிருக்கும் நடிகைகளை வரவழைத்து அவர்களை வைத்து பாலியல் தொழில் செய்துள்ளார் கிஷன்.

நடிகைகளுடன் உறவு கொள்ள வாடிக்கையாளர்களிடம் தலா ரூ. 2 லட்சம் வாங்கியுள்ளார். அழைத்து வரப்பட்ட நடிகைகளை பாலியல் தொழிலாளிகள் என்று அமெரிக்காவில் விளம்பரம் செய்துள்ளார்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நடிகைகளை ஒரு சின்ன குடியிருப்பில் அடைத்து வைத்துள்ளார் கிஷன். அவர்கள் யார், யாருடன் உறவு கொள்ள வைக்கப்பட்டனர் என்ற பல கேவலமான விபரங்களை கிஷனின் மனைவி எழுதி வைத்திருக்கிறார். அந்த நோட்டை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பாலியல் தொழில் செய்து வந்த சந்திரா, கிஷன் குறித்து அறிந்த பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க முடியாதபடி செய்துவிட்டனர். அவர்களின் குழந்தைகள் வெர்ஜினியாவில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்