விலங்கு காப்பாளரை ஏமாற்றி கொரில்லா செய்த ஆச்சரிய செயல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் தனக்கு உணவு வழங்கப்படாததை கொரில்லா செய்கை செய்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Miami வனவிலங்கு பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் அங்கிருந்த கொரில்லா ஒன்று சுற்றுலாப் பயணிகளை நோக்கி தனக்கு உணவு வழங்கப்படவில்லை என்பது போன்று செய்கை காட்டியுள்ளது.

அப்போது திடீரென்று சுற்றுலாப் பயணி ஒருவர் ஆரஞ்சு பழத்தை வீச உடனே அந்த கொரில்லா ஒன்றும் தெரியாதது போல், கேட்ச் பிடித்து அதன் பின்பு விலங்கு காப்பாளர் இருக்கிறாரா என்று பார்த்து பழத்தை சாப்பிடுகிறது.

இந்த வீடியோ கடந்த 2013-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது எனவும், தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்