அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: தலையில் பலமுறை குண்டு பாய்ந்த மாணவன் உயிர் பிழைத்த வீடியோ உள்ளே!

Report Print Trinity in அமெரிக்கா

அமெரிக்காவில் சிகாகோ அருகே உள்ள யூனிவர்சிட்டி வில்லேஜில் பார்ட்டி கொண்டாட்டத்திற்கு நடுவே வன்முறையாளர்கள் சிலரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் இறந்ததாக கருதப்பட்ட 17 வயது மாணவன் ஒருவன் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.

கடந்த திங்கட் கிழமை அதிகாலை 4.45 மணிக்கு யூனிவர்சிட்டி வில்லேஜ் எனப்படும் பகுதியில் இந்த கோர சம்பவம் நடைபெற்றது. அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு கார்கள் சுற்றி கொண்டிருந்தன. அதில் ஒரு காரில் இருந்து திடீரென பல நபர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

சம்பவம் நடந்ததை அறிந்த உடன் தீயணைப்பு துறையினர் 1300வது பிளாக் கிற்கு வந்த போது மேலே குறிப்பிடப்பட்ட 17 வயது நபர் இறந்து விட்டதாக அவர்கள் கருதினர். காரணம் அவருக்கு தலையில் பலமுறை சுடப்பட்ட தடயம் இருந்தது. சுயநினைவின்றியும் இருந்ததால் அவர் இறந்ததாக நினைத்து பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் சடலத்தை கைப்பற்ற வேண்டி இந்த நபரை அங்கேயே தரையில் படுக்க வைத்து வெள்ளை துணியால் முகம் முழுவதும் போர்த்தி வைத்தனர்.

ஆனால் 15 நிமிடங்கள் கழித்து அந்த 17 வயது பையனிடம் இருந்து சில அசைவுகள் ஏற்பட்டுள்ளதை கவனித்த மற்ற நபர்கள் தீயணைப்பு துறையினரிடம் கூற உடனடியாக மருத்துவ உதவியாளர்களால் முதலுதவி செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த கொடூர துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒரு பெண் (24) இறந்து விட்டார். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் மேக் 10 ரக துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பொலீசோடு ஒத்துழைக்கவில்லை என்பதால் இது பலகாலமாக நடைபெற்று வரும் இரு கும்பல்களுக்கு இடையேயான துப்பாக்கி சூடு சம்பவமாக இருக்கலாம் என கருத படுகிறது.

இது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...