இருவரில் ஒருவரை கொலை செய்து பிணத்தை சாப்பிட வைத்துவிடுவேன்! மகனிடமிருந்து தப்பிக்க போராடிய தாய்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் இருவரில் ஒருவரை கொலை செய்து பிணத்தை சாப்பிட வைத்துவிடுவேன் என்று பெற்றோரை மிரட்டிய கொடூர மகனுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் Steven Brian Cole. 40 வயதான இவருக்கு 72 வயதில் தாயும், 85 வயதில் தந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் Steven Brian Cole-ஐ பொலிசார் கடந்த ஞாயிற்று கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், Steven Brian Cole அவரது பெற்றோரை கொடூரமாக துன்புறுத்தி வந்துள்ளார்.

இருவரையும் துன்புறுத்தி வந்த அவர் ஒரு கட்டத்தில் உங்கள் இருவரில் ஒருவரை கொலை செய்து, அந்த பிணத்தை உங்களில் உயிரோடு இருக்கும் ஒருவரை சாப்பிட வைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் தாய், அவரிடமிருந்து தப்பிக்க போரடியுள்ளார். அதன் பின்னரே இது குறித்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததாக கூறியுள்ளனர்.

மேலும் Steven Brian Cole அவரின் தாயை பெட் ரூமில் வைத்து கொடுமையா சித்ரவதை செய்துள்ளார். அப்போது அவர் வலி தாங்க முடியாமல் பல நாட்கள் கத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers