49 வயதில் திருமதி அழகிப் பட்டம் வென்று சாதித்து காட்டிய தமிழச்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் நடைபெற்ற திருமதி அழகிப் போட்டியில் 49 வயது மதிக்கத்தக்க தமிழகத்தைச் சேர்ந்த பெண் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 13-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டி நடைபெற்றது, இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 85 பேர் கலந்து கொண்டனர்.

அதில் இந்தியாவின் தமிழகத்தின் கோயமுத்தூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ மகேஷ்(49) என்பவரும் கலந்து கொண்டார்.

இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார், இவருடைய கணவர் மகேஷ்குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு மிஸ்டர் திருமதி கோவை என்ற அழகி பட்டத்தையும், கடந்த 2016-ஆம் ஆண்டு திருமதி இந்தியா என்ற அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட இவர், திருமதி உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.

சிறு வயது முதலே சாதிக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன், அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் கூட்டுக் குடும்பம் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருவது தான் எனவும், அப்படி தனியாக இருக்கும் போது இதை சில நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பெண் குழந்தைகளிடம் அத்து மீறுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்