மாற்று திறனாளி ஒருவர் நீரில் மூழ்கி இறப்பதை நிதானமாக வீடியோ எடுத்த 5 வாலிபர்கள்: அதிர்ச்சி வீடியோ உள்ளே!

Report Print Trinity in அமெரிக்கா

புளோரிடா மாகாணத்தின் அட்டர்னியான Phil Archer , நீந்த முடியாத நபர் ஒருவர் குளத்தில் மூழ்கி மரணித்து கொண்டிருந்ததை பார்த்து கிண்டல் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிந்த வாலிபர்கள் மீதான வழக்கில் அவர்கள் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் டண் எனும் மாற்று திறனாளி ஒருவர் retention குளத்தில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவத்தை மறு கரையிலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 5 வாலிபர்கள் வீடியோ எடுத்தனர்.

அந்த வீடியோவில் டண்னை கிண்டல் செய்து சிரித்தபடி "let him die " என்று கூறியபடியே வீடியோ எடுத்துள்ளனர்.

மூழ்கி கொண்டிருந்தவரை காப்பாற்ற 911ற்கு அழைக்காமல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து குற்றம் என்று கூறி இந்த ஐந்து வாலிபர்கள் மேல் காவல்துறை வழக்கு தொடுத்தது.

முன்னதாக டண் னின் காதலி தனது காதலனை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்தார். அவருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் ஒரு கால் சரியாக நடக்க வராது எனவும் லேசாக விந்தியபடி நடப்பார் எனவும் அவரது காதலி கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் ஜூலை 12ஆம் தேதி ஒரு குளத்தில் மிகவும் அழுகிய நிலையில் டண் னின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர்.

எப்படி டண் அந்த குளத்தில் சடலமாக கிடந்தார் என அவரது குடும்பமும் , காவல்துறையினரும் திகைத்து போயிருந்த வேளையில் அவரது குடும்பத்தாருக்கு அந்த வாலிபர்கள் முகநூலில் பதிந்த வீடியோ வாட்சப்பில் வந்திருக்கிறது.

அதன் அடிப்படையில் விசாரணையை துவக்கிய போலீசார் அந்த ஐந்து வாலிபர்களின் அலட்சியத்தால்தான் டண் உயிர் இழந்திருக்கிறார் என்று அவர்கள் மீது வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது அதில் அந்த ஐந்து மாணவர்களும் குற்றவாளிகள் இல்லை என நீதிபதி கூறினார்.

காரணம் புளோரிடா சட்டத்தில் இது போன்ற சம்பவத்தை குற்றமாக கருதவில்லை என்றும் ஆபத்தில் இருப்பவரை காப்பாற்ற 911 ஐ அழைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படாததால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து மாணவர்களும் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்