காற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்: ஆச்சரிய வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் Mississippiயில் பறந்து வந்த கார் ஒன்று எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் மோதி நொறுங்கிய பின்னரும் அதிலிருந்து ஒரு பெண் எந்த காயங்களுமின்றி வெளியே வரும் ஆச்சரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வேகமாக வந்த அந்த கார் சிறு தடுப்பொன்றில் மோதி காற்றில் பறக்கிறது. பறந்து வந்த அந்த கார் சரியாக ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் மோதி நொறுங்குகிறது.

பதற்றத்தை ஏற்படுத்தும் அந்த நிகழ்வு முடிவதற்குள் அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த காரிலிருந்து ஒரு பெண் இறங்கி வருகிறார்.

அவருக்கு எந்த காயமும் பட்டதாகத் தெரியவில்லை. Shelby May (24) என்னும் அந்த பெண் குடிபோதையிலிருந்தது பின்னர் தெரிய வந்துள்ளது.

அவள் மீது குடி போதையில் கார் ஓட்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்