ஆணாக மாறிய மகளின் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடிய பிரபலம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க பிரபல நடிகையான Cynthia Nixon தனது மகனின் பட்டமளிப்பு விழாவை சிறப்பாகக் கொண்டாடினார்.

Sex and the City என்னும் படம் மூலம் பிரபலமாகிய Cynthia தனது மகனாகிய Samuel (21)இன் பட்டமளிப்பு விழாவை சிறப்பாகக் கொண்டாடினார்.

இதில் சுவாரஸ்யமான விடயம் என்றால், Samuel பிறக்கும்போது பெண்ணாக பிறந்தவர், அப்போது அவர் பெயர் Samantha.

பின்னர் அவர் ஆணாக மாறினார், அவர் பெயரும் Samuel என்று மாற்றப்பட்டது.

பாலின மாற்றம் அடைந்தவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் Cynthia தனது மகளுக்கும் ஆதரவளித்து அவரை மகனாக ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட Cynthia, எனது மகன் Samuel Joseph Moses பட்டப்படிப்பை முடித்ததற்காக நான் மிகவும் பெருமையடைகிறேன் என்று ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்