அதிபர் டிரம்ப் செயலாளரை அசிங்கப்படுத்தி வெளியேற்றிய தனியார் உணவகம்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்று, அதிபர் ட்ரம்பின் பத்திரிக்கை செயலாளர் Sarah Huckabee Sanders-ஐ உணவகத்திலிருந்து வெளியேற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளராகபணியாற்றி வரும் Sarah Sanders, நேற்று இரவு வெள்ளை மாளிகையில் இருந்து 200 மைல்கள் தூரத்தில், வர்ஜீனியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் Red Hen என்ற உணவகத்தில் தன்னுடைய பொழுதை கழிப்பதற்காக குடும்பத்துடன் உணவருந்த சென்றுள்ளார்.

Sarah தனது கணவரின் பெயரில் பதிவு செய்திருந்த 8 இருக்கைகளில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த பொழுது, அங்கு வந்த உணவகத்தின் இணை உரிமையாளர் Stephanie Wilkinson, ட்ரம்பின் நிர்வாகம் மனிதாபிமானமில்லாத முறையில் நடைபெறுவதாக தாம் கருதுவதாகவும், அத்தகைய நிர்வாகத்திற்கு கீழ் தாங்கள் வேலை செய்வதாலும், உணவகத்தை விட்டு வெளியேறுமாறு சாராவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து சாரா குடும்பத்துடன் வெளியேறியுள்ளார்.

பின்னர் நடந்தசம்பவம் குறித்து சாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட தனியார் உணவகத்திற்கு எதிராக ட்ரம்ப் ஆதரவாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்