குழந்தைகளை கடத்த முயன்ற கார்திருடன்... களத்தில் இறங்கிய தாயின் வீரச்செயல்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தைகளை கடத்த முயன்ற கார் திருடனை துப்பாக்கியால் சுட்டு குழந்தைகளின் தாய் வீழ்த்தியுள்ளார்

அமெரிக்காவின், Dallas பகுதியில் Booker-Hicks என்ற பெண் தன்னுடைய 2 மற்றும் 4 வயதுடைய, இரண்டு குழந்தைகளையும் காரின் உள்பகுதியில் அமர வைத்துவிட்டு, காரில் டீசல் நிரப்பியதற்கான பணத்தை செலுத்த சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து காரை நோக்கி வரும்பொழுது, காரின் உட்பகுதியில் மர்மநபர் ஒருவர் அமர்ந்திருப்பதையும், அவர் குழந்தைகளுடன் சேர்த்து காரை திருட முயற்சி செய்வதையும் கவனித்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், காரை விட்டு வெளியில் இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் திருடன் அதனை பொருட்படுத்தாமல் காரை திருடுவதிலே மும்மரமாக இருந்ததால், கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு திருடனை எச்சரிக்கும் விதமாக Booker சுட்டுள்ளார்.இதில் எதேச்சசையாக குண்டு திருடனின் தலைப்பகுதியில் காயத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்த்துறையினர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய திருடனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சம்மந்தப்பட்ட நபரின் பெயர் Ricky Wright (36) என்பது தெரியவந்தது.

இதற்கிடையில், திருடனை நான் வேண்டுமென்றே சுடவில்லை, அந்த அளவிற்கு நான் கொலைகாரியும் இல்லை. அவருக்கு எச்சரிக்கு விடுத்த பின்னர், பயமுறுத்தும் விதமாகவே துப்பாக்கியால் சுட்டேன் என Booker விளக்கமளித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்