ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை! கொலை செய்த காதலனை மணமுடித்த காதலி

Report Print Fathima Fathima in அமெரிக்கா
243Shares
243Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் தன்னுடைய குழந்தையை கொன்ற காதலனை திருமணம் செய்துள்ளார் Valerie என்ற பெண்.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தை சேர்ந்தவர் Justin T. Layne(வயது 21), இவரது காதலி Valerie.

இவருக்கு ஏற்கனவே வேறு ஒருவர் மூலம் ஆறு மாத குழந்தை உள்ளது, இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் 25ம் திகதி வீடு திரும்பிய Valerieக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மிக ஆபத்தான நிலையில் ரத்த காயங்களுடன் குழந்தை கிடந்தது, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி நான்கு நாட்கள் கழித்து குழந்தை இறந்தது.

இதுதொடர்பான வழக்கில் Valerie-ன் தற்போதைய காதலனை பொலிசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.

சம்பவம் நடந்த 10 நாட்களுக்கு பின்னர் காதலனை திருமணம் செய்த Valerie, ஆதரவாக பேசி வருகிறார்.

அவர் கூறுகையில், எந்தவொரு பெற்றோரும் குழந்தை இழக்க விரும்பமாட்டார்கள்.

நான் என் கணவருக்கு ஆதரவாக இருப்பேன், வேண்டுமென்றே அவர் இதை செய்திருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இன்னும் பதில்களை தேடிக்கொண்டிருப்பதாகவும், எட்டு மாதங்களாக பொலிசார் தாமதித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ள நிலையில், 20ம் திகதி வழக்கு நீதிமன்றத்துக்கு வரவுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்