தன் அக்கா தன் உடன் பிறந்தவள் அல்ல என்று தெரிய வந்ததும் தம்பி செய்த காரியம்: நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பி தன் அக்கா தன் உடன் பிறந்தவள் அல்ல என்று தெரியவந்ததும் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்தக் கடிதத்தைப் பார்த்து பிரபல மொடல் நவோமி கேம்பல் உட்பட பல நெட்டிசன்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

Houstonஐச் சேர்ந்தவர் Pamela Lara (18), அவரது தம்பி Jared (17). ஒரு நாள் தனது அக்காவான Pamela தனது உடன் பிறந்த சகோதரி அல்ல என்பது Jaredக்கு தெரியவந்தது.

கடைக்குச் சென்று தன் அக்காவுக்குப் பிடித்த ஸ்னாக்ஸ்களை வாங்கி வந்த Jared, தனது அக்காவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

உன் மீது எனக்கு எவ்வளவு அன்பு என்பதைத் தெரியப்படுத்தவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னைப் பொருத்தவரை நீதான் எப்போதும் என் அக்கா, என் சொந்த அக்கா. உலகத்திலேயே எனக்குக் கிடைத்த பொக்கிஷம் நீதான்.

எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நீ எனக்காக ஓடி வருவது போலவே நானும் உனக்காக எப்போதும் ஓடி வருவேன்.

உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எப்போதும் தொல்லை கொடுக்கும் உன் தம்பி என்று அவர் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்த கடிதத்தைக் கண்டு பலரும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு தங்கள் உணர்வுகளை கண்ணீரோடு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்