நடு ரோட்டில் நின்ற இளைஞரைத் தேடி வந்த 200 வேலைவாய்ப்புகள்: அப்படி என்ன செய்தார்?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்த இளைஞரை தேடி 200-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.

அமெரிக்காவில் வீடில்லாமல் தவிக்கும் ஹங்கேரியைச் சேர்ந்த இளைஞர் டேவிட் கசாரெஸ்(27) என்பவர் தங்குவதற்கு வீடில்லாமல் வேலையும் இல்லாமல் இணைந்துள்ளார்.

இதனால் இவர் கடந்த 27-ஆம் திகதி கலிபோர்னியாவின் பரபரப்பான சாலை ஓரத்தில், வீடில்லாமல் தவிக்கும் தனக்கு வேலை கொடுங்கள் என்று கேட்கும் பதாகையுடன் நின்றுள்ளார்.

அதுமட்டுமின்றி அப்பகுதியில் செல்பவர்களிடம் தன்னுடைய சுயவிவரத்தையும் கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து டேவிட் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்ததால், அதன் பயனாக அவருக்கு 200 -க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தேடி வந்துள்ளன.

கூகுள், பிட்காயின் போன்ற பிரபல நிறுவனங்கள் முதல் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அவருக்கு வேலை கொடுக்க தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்