எச்சரிக்கையை மீறி ஏவுகணைகளை தயாரிக்கும் வடகொரியா: அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டு

Report Print Kabilan in அமெரிக்கா

வடகொரியா எச்சரிக்கையை மீறி மீண்டும் 2 ஏவுகணைகளை தயாரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வட கொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வந்ததால், அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடை விதித்தன.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-யங்கும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் அணுகுண்டுகளையும், ஏவுகணைகளையும் முற்றிலும் அழிப்பதாக வட கொரியா ஒப்புக் கொண்டது. எனினும், அமெரிக்கா செயற்கைகோள்களை வடகொரியாவின் மீது பறக்கவிட்டு அந்நாட்டின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளது.

அப்போது அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வருவது நிறுத்தப்படவில்லை என்பது அமெரிக்காவுக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்படும் வரை அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

இந்நிலையில், டிரம்ப்பின் எச்சரிக்கையை மீறி வட கொரியா மீண்டும் 2 ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் தலைநகர் பியாங் யாங் அருகே உள்ள சனும்டாஸ் எனும் இடத்தில், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது.

மேலும், அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை வட கொரிய தொழிற்சாலைகள் தொடர்ந்து உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்க உள்துறை அமைச்சர் மைக்பெம்போ குற்றஞ்சாட்டி இருந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers